சுடச்சுட

    

    அரியலூர் அருகே முன்விரோதத்தில் மூதாட்டியை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.

    திருமானூர் காவல் சரகம் சுள்ளான்குடியைச் சேர்ந்த கனகையா மனைவி பார்வதி(68). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் குணசேகரன், இவரது மனைவி கலாவதி(29). பார்வதிக்கும், கலாவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த ஆக.18-ம்தேதி கலாவதி எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டையை பார்வதி வீட்டின் வைக்கோல் போரில் வீசினாராம். இதை தட்டிக் கேட்ட பார்வதியை கலாவதி கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பார்வதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் வழக்குப்பதிந்து கலாவதியை கைது செய்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai