Enable Javscript for better performance
மொபெட் மீது லாரி மோதி விவசாயி சாவு - Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே மொபட் மீது லாரி மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் அருகே உள்ள நாயக்கர்பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜதுரை(47). விவசாயி. இவர் புதன்கிழமை தனது மொபெட்டில் வயலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஊருக்கு அருகில் வந்த போது, புதுப்பாளையத்தை சேர்ந்த சின்னத்துரை ஓட்டி வந்த டிப்பர் லாரி மொபெட் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸார் சின்னத்துரையை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai