மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் காயம்
By அரியலூர், | Published on : 23rd August 2013 05:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் செவ்வாய்க்கிழமை சிறுவன் காயமடைந்தான்.
அரியலூர் மாவட்டம்,கீழப்பழூர் காவல் சரகம் காணிக்கைபுரத்தைச் சேர்ந்தவர் மோசஸ்இன்னாசி (35). இவரது மகன் பேட்ரிக்(10). இவன் செவ்வாய்க்கிழமை(ஆக.20) காணிக்கைபுரத்தில் கோக்குடி ரோட்டில் நடந்து சென்றபோது விஸ்ணம்பேட்டை சின்னத்துரை மகன் சூர்யா(18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பேட்ரிக் மீது மோதியது. இதில் பலத்தக் காயம் அடைந்த பேட்ரிக் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்த புகாரின் பேரில் கீழப்பழூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சாகுல் அமீது வழக்குப் பதிந்து சூர்யாவைக் கைது செய்தார்.