Enable Javscript for better performance
ரூ.27.5 கோடியில் புதை சாக்கடைத் திட்ட பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் நகராட்சியில் ரூ.27.5 கோடியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1.42 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் 17 தனி மின்விசைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.  29 பள்ளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலும், 43 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.10.75 லட்சம் மதிப்பிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ரூ.1.96 கோடி மதிப்பில் 33 புதிய நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.4.2 கோடியில் 40 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    அரியலூர் நகராட்சியில் ரூ.27.5 கோடியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் ஜயங்கொண்டம் நகராட்சியில் ரூ.53.10 கோடியிலும், உடையார்பாளையம் நகராட்சியில் ரூ. 27.2 கோடியிலும் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய  தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai