சுடச்சுட

  

  அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த பாமக பிரமுகர் கைது

  By ஜயங்கொண்டம்  |   Published on : 24th August 2013 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் கல்வீசி அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த பாமக பிரமுகரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  ஜயங்கொண்டத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் திருச்சி நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஜயங்கொண்டம் மேலக்குடியிருப்பைச் சேர்ந்த பாமக பிரமுகர் செல்வம் (34) பேருந்தை மறித்து பேருந்தின் முன்புற கண்ணாடியை கல்வீசி உடைத்தாராம்.

  இச்சம்பவம் குறித்து ஓட்டுநர் கண்ணன் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ரபீக்ஹுசேன் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai