சுடச்சுட

    

    ஆக. 30-ல் சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட முடிவு

    By அரியலூர்,  |   Published on : 24th August 2013 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து வருகிற 30-ம் தேதி மறியலில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜி. செல்வராஜ் தலைமை வகித்தார். அரியலூர் ஒன்றியச் செயலாளர் மதியழகன் வரவேற்றார்.

    கூட்டத்தில், கடந்த மே 7 ஆம் தேதி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் நடத்திய முதலமைச்சர் சந்திப்புப் பேரணியின் போது, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், சமூகநலத் துறைச் செயலாளர், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

    இது தொடர்பாக சத்துணவு மாநில நிர்வாகிகள் முதல்வரை சந்தித்துப் பேச வாய்ப்பளிக்க வலியுறுத்தி, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கருப்பு உடையணிந்து வருகிற 30-ம் தேதி பெண்கள் உள்பட 500-க்கும் மேல்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழரசன், ஜயங்கொண்டம் ஒன்றியத் தலைவர் சிற்றரசு, செயலாளர் சாசகான், அரியலூர் ஒன்றியத் தலைவர் வெங்கடகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் பிச்சைப்பிள்ளை, ரட்சன்யமேரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவில் மாவட்டப் பொருளாளர் பழனிவேல் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai