சுடச்சுட

  

  குருப் 4 தேர்வு: அரியலூர் மாவட்டத்தில் 49 தேர்வுக் கூடங்கள்

  By அரியலூர்  |   Published on : 24th August 2013 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெற உள்ளதையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் 49 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குருப் 4 போட்டித் தேர்வுகள் நடைபெற உள்ளன.

  இதற்காக அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் ஆகிய 3 மையங்களில் 49 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 14,598 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதவுள்ளனர். அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.

  அனைத்து தேர்வர்களும் தேர்வு தொடங்கும் நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருக்க வேண்டும். தேர்வுக் கூடத்துக்குள் செல்போன், கால்குலேட்டர் வசதி பொருத்திய கைக்கடிகாரங்கள் ஆகியன கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.

  அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து அந்தந்த வட்டத்தில் தொலைவில் அமைந்துள்ள தேர்வுக் கூடங்களுக்கு தேர்வர்கள் உரிய நேரத்தில் செல்ல வசதியாக காலை 7 மணி முதல் பேருந்து இயக்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai