சுடச்சுட

    

    நாளை விஜயகாந்த்பிறந்தநாள்: நலத் திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

    By அரியலூர்  |   Published on : 24th August 2013 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) அந்தக் கட்சியினர் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.

    அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் அரியலூர், திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம், ஜயங்கொண்டம், செந்துறை, உடையார்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் தேமுதிக கொடியேற்றப்படுகிறது. இதையொட்டி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

    ஞாயிற்றுக்கிழமை இரவு அரியலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ரூ. 2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது என தேமுதிக மாவட்டச் செயலாளர் இராம. ஜெயவேல் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai