Enable Javscript for better performance
புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனம் சார்பில், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுமித்சைமன் பொதுமக்களிடையே புகையிலை குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். அவர் பேசும் போது, உலகம் முழுவதும் 6 நொடிக்கு ஒருவர் புகையிலை பழக்கங்களால் உயிரிழக்கின்றனர் என்றார்.

    நிகழ்ச்சியில் டால்மியா சிமென்ட் ஆலை நிறுவன சமுகப் பணி மேலாளர் ஆல்வின் பேசுகையில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாய் மற்றும் நுரையீரல்  புற்றுநோய்க்கு புகைபிடித்தலே காரணம் என்று புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.

    நிகழ்ச்சியில் புகையிலை விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரியலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai