சுடச்சுட

    

    முதல் நிலையில் தரம் உயர்த்த மாவட்ட வளர்ச்சிக் குழு வலியுறுத்தல்

    By அரியலூர்,  |   Published on : 24th August 2013 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மாவட்ட வளர்ச்சிக் குழு வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

    அரியலூர் நகராட்சி கடந்த 2004 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, பிறகு, 2010 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. அரியலூர் பேரூராட்சியாக இருந்த போது இருந்த 18 வார்டுகள் மட்டுமே இதுநாள் வரை நீடித்து வருகிறது.

    அரியலூர் நகரோடு ஒன்றியுள்ள வாலாசநகரம், தவுத்தாய்குளம், எருத்துக்காரன்பட்டி, கயர்லாபாத் ஆகிய ஊராட்சிகளை அரியலூர் நகரோடு இணைத்து அரியலூர் நகராட்சியை முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மேலும், அரியலூர் நகராட்சியில் உள்ள வார்டுகளை முறையாக இணைத்து 21 வார்டுகளாகப் பிரித்து சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களைச் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai