Enable Javscript for better performance
ஏரி, குளங்களைத் தூர்வார பாஜக வலியுறுத்தல் - Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களைத் தூர்வார தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக வலியுறுத்தியது.

    அரியலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் மாநில செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சிறுபான்மை அணி மாநிலத் தலைவர் ஈபன் ஜெயசீலன், மாநில பொருளாளர் அப்துல் காதர், மாநில பொதுச் செயலர் அப்துல்ரஹீம், கோட்டப் பொருப்பாளர் சார்லஸ், திருச்சி கோட்டப் பொறுப்பாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்த குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்ய வேண்டும். இந்திய எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் மீது பதிலடி கொடுக்க வேண்டும். இரட்டை வேடம் போடும் இலங்கை அரசுக்கு உலக அரங்கில் நெருக்கடி கொடுக்கும் விதமாக, இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் செல்லக் கூடாது. இலங்கை சம்பவங்களை பற்றி உண்மைக்கு மாறாக எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை இந்தியாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழகக் குடும்பங்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மதுவை ஒழித்து, தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்களான திருச்செந்தூர், நாசரேத், திருவண்ணாமலை, பழனி, வேளாங்கண்ணி, கும்பகோணம், நாகூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மதுக் கடைகளை அகற்ற வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் பொதுப் பெட்டி இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை உடனடியாகத் தூர்வார வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் பூச்சி மருந்து தட்டுப்பாடின்றிக் கிடைக்கவும், விவசாயக் கடன், ஏழை இந்து மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்ட இளைஞரணி பொதுச்செயலர் வைரவேல் வரவேற்றார். நகரத் தலைவர் கோகுல்பாபு நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai