சுடச்சுட

    

    அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் மத்திய அரசை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு  கட்சியின் மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.

    சிறுபான்மை அணி மாநிலத் தலைவர் ஈபன் ஜெயசீலன், மாநிலப் பொதுச் செயலர் அப்துல் ரஹீம், கோட்டப் பொறுப்பாளர் சார்லஸ், மாநில பொறுப்பாளர் ஆசிம், மாநில பொறுப்பாளர் அப்துல் காதர், திருச்சி கோட்டப் பொறுப்பாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட இளைஞரணி பொதுச்செயலர் வைரவேல் வரவேற்றார். முடிவில் நகரத் தலைவர் கோகுல்பாபு நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai