சுடச்சுட

  

  அரியலூர் அருகே இரு அரசுப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை கல்வீசித் தாக்கப்பட்டன.

  சனிக்கிழமை இரவு தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்து அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த வெள்ளங்குழி பாலத்தில் வந்தபோது 2 மர்ம நபர்கள் அந்தப் பேருந்தின் மீது கல் வீசியதில், அவற்றின் கண்ணாடிகள் உடைந்தன.

  பேருந்து ஓட்டுநர் இளையராஜா பேருந்தை நிறுத்தி விட்டு அவர்களைப் பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பினர். 

  இதேபோல ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தஞ்சையிலிருந்து சென்னை சென்ற ஒரு அரசுப் பேருந்தும் ஒரு கும்பலால் அதே இடத்தில் கல்வீசித் தாக்கப்பட்டது. 

  இதுகுறித்து பேருந்து ஓட்டுநர்கள், இளையராஜா, அன்பழகன் ஆகியோர் அளித்த தனித்தனிப் புகார்களின் பேரில் மீன்சுருட்டி போலீஸôர் விசாரித்து வருகிறார்கள்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai