சுடச்சுட

  

  தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ரொட்டி, பழங்கள் வழங்கப்பட்டன.

  தேமுதிக நிறுவனரின் பிறந்த நாளை அக்கட்சியினர் வறுமை ஒழிப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர். அரியலூர் மாவட்ட தேமுதிக, தேமுதிக இளைஞரணி சார்பில் அரியலூர் நகரில் உள்ள 18 வார்டு பகுதிகளிலும் தேமுதிக கொடியேற்றப்பட்டது.

  தொடர்ந்து அரியலூர் மங்காய்பிள்ளையார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள 150 நோயாளிகளுக்கு ரொட்டி,கேக், பழங்களை அரியலூர் மாவட்ட தேமுதிக செயலர் ராமஜெயவேல், மாநில தொழிற்சங்கச் செயலர் வேணுராம் ஆகியோர் வழங்கினர்.

  நிகழ்ச்சிகளில் மாவட்ட இளைஞரணிச் செயலர் தாமஸ் ஏசுதாஸ்,நகர அவைத் தலைவர் சிவா, மாவட்டத் துணைச் செயலர் ஜான்கென்னடி, மாவட்ட மாணவரணி செயலர் கே.டி.ஆர்.,மாவட்ட தொண்டரணிச் செயலர் நல்லதம்பி,பொதுக் குழு உறுப்பினர் செந்தில், ஒன்றியச் செயலர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் சிட்டிபாபு உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai