சுடச்சுட

    

    அரியலூர் அருகே அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி தம்பதி காயமடைந்தனர்.

    அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் சரகம், தெற்குபரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (48). இவரது மனைவி ராதா (46). இவர்கள் இருவரும் தெற்குபரணம் பிரதான சாலையில் அண்மையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

    இதுகுறித்து ராதா சனிக்கிழமை இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai