Enable Javscript for better performance
திருமழபாடி கோவிலில்  இன்று பாலாலயம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், திருமழப்பாடி சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலின் பாலாலய விழா திங்கள்கிழமை (ஆக. 26) நடைபெறுகிறது.

    தேவாரப் பாடல் பெற்ற, பழமை வாய்ந்த இக்கோவிலில் அருள்பாலித்துவரும் வைத்தியநாத சுவாமியை அப்பர் பெருமான் மழபாடியுள் மாணிக்கமே உன்னையல்லால் யாரை நினைக்கேன் என உருகிப் பாடி மகிழ்கிறார். இந்தக் கோவிலைச் சீரமைத்து திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி பாலாலய விழா திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மணி, தக்கார் ராமமூர்த்தி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai