சுடச்சுட

  

  அரியலூரில் பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

  அரியலூர் சடையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குபேந்திரன் (30). அரியலூர் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்துள்ளார். இவரிடம் அரியலூர் சிந்தாமணித் தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (24), பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (43) ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன், மற்றும் ரூ. 300 ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.

  இதுகுறித்து குபேந்திரன் சனிக்கிழமை அரியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளர் (பொ) ராஜேஸ்வரி வழக்குப் பதிந்து நவநீதகிருஷ்ணனைக் கைது செய்தார். வேல்முருகனைத் தேடி வருகிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai