Enable Javscript for better performance
அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை- Dinamani

சுடச்சுட

    

    5தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கவிதா ஜி. ராஜேந்திரன் அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அரியலூர் மாவட்ட அதிமுக செயலரும், திருச்சி மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான கவிதா ஜி. ராஜேந்திரன் மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அரியலூர் வந்த அவருக்கு மாவட்ட எல்லையில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அரியலூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கும், மங்காய்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் கணேசன்,வழக்குரைஞர் பிரிவுச் செயலர் வெங்கடாசலபதி,மாணவரணிச் செயலர் சங்கர்,அரியலூர் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் நேஷனல் நாகராஜன், அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai