சுடச்சுட

    

    அரியலூர் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலைகளில் உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆலைகள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார் தேமுதிக தொழிற்சங்கப் பேரவைத் துணைச் செயலர் வேணுராம்.

    தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:

    தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போடும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்  என்றார் அவர்.

    மாவட்ட தேமுதிக செயலர் ராமஜெயவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலர்கள் ஏ.கே. கவியரசன், இ.சி. மணி,மாவட்டப் பொருளாளர் ஆர். மணிமாறன், ஒன்றியச் செயலர்கள் ஜான்வின்சென்ட்ராஜா (திருமானூர்),எம். அறிவழகன் (தா. பழூர்), ராஜேந்திரன்(ஜயங்கொண்டம்), குமாரதேவன் (ஆண்டிமடம்), ப.செல்வராஜ் (செந்துறை),நிர்வாகிகள் கே.எஸ். ரவி,மாரியப்பன், எழிலரசன் வ. கமலம், த. சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 100 ஏழைப் பெண்களுக்கு ரூ. 25 ஆயிரத்தில் சேலைகள், கிரிக்கெட், கேரம், கபடி, சைக்கிள்,மராத்தான் ஓட்டம், பெண்களுக்கான கோலப் போட்டி ஆகியவற்றில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    அரியலூர் ஒன்றியச் செயலர் எஸ். செல்வராஜ்,மாவட்ட இளைஞரணிச் செயலர் அ. தாமஸ் ஏசுதாஸ் ஆகியோர் வரவேற்றனர். நகர அவைத் தலைவர் க. சிவா நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai