சுடச்சுட

    

    ஓய்வுப் பெற்ற காவலர்கள் இறந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கக் கூட்டம் அதன் தலைவர் பி. முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

     கூட்டத்தில் செப்.15-ம் தேதி நடைபெறவுள்ள மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தலில் அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்க பொறுப்பாளர்களுடன் உறுப்பினர்களும் கலந்து கொள்வது, ஓய்வு பெற்ற காவலர்கள் அனைவரும் பேருந்தில் பயணம் செய்ய இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயலர் சுப்பிரமணியன், பொருளாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai