சுடச்சுட

    

    அரியலூர் அருகே திங்கள்கிழமை மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

    அரியலூர் அருகே உள்ள காட்டுப்பிரிங்கியத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் நீலமேகம் (27) விவசாயக் கூலித் தொழிலாளி.

    இவர் அண்மையில் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கியிருந்தார். திங்கள்கிழமை மாலை நீலமேகம் கீழப்பழூரிலிருந்து காட்டுப்பிரிங்கியத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நீலமேகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அரியலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai