சுடச்சுட

  

  : சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரியலூர் அருகே கிராம் மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  அரியலூர் மாவட்டம், கோவில்சீமை கிராமத்தில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், கோவில்சீமை கிராமம் அருகேயுள்ள மருதையாற்று ஊற்று நீரை பருகியதால் கந்தசாமி என்ற முதியவர் உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  இதைத்தொடர்ந்து, ஜயங்கொண்டம் நகராட்சி சார்பில் கோவில்சீமை கிராமத்தில் உள்ளவர்களுக்கு லாரி மூலம் தாற்காலிகமாக குடிநீர் வழங்கப்பட்டது. ஒரு சில நாள்களே விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை வழங்கப்படவில்லை, எனக் கூறப்படுகிறது.

  இதையடுத்து, கோவில்சீமை கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் வி.கைகாட்டி- முட்டுவாஞ்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்து அரியலூர் கோட்டாட்சியர் கணபதி, வட்டாட்சியர் முருகன் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  மேலும், கோவில்சீமை கிராமத்துக்கு குடிநீர் வழங்கவும், ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததனர்.

  இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

  இந்த  மறியலால் வி.கைகாட்டி - முட்டுவாஞ்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவர்த்து பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai