Enable Javscript for better performance
பொறியாளரிடம் பணம் பறித்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில்  ஒப்பந்த அடிப்படையில் பொறியாளராக பணியாற்றி வருபவர் மார்ட்டின் (39).

    இவர் திங்கள்கிழமை பணிக்கு சென்ற போது அதே ஆலையில் பணிபுரியும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திரன் (33) என்பவர் மார்ட்டினிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.

    மார்ட்டின் சப்தமிட்டதால் அருகிலிருந்தவர்கள் ஜிஜேந்திரனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஜிஜேந்திரனை கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai