Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

    By அரியலூர்,  |   Published on : 28th August 2013 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 36 லட்சத்து 77 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    கூட்டத்தில் சமுகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரியலூர், செந்துறை, ஜயங்கொண்டம் வட்டங்களைச் சேர்ந்த 105 பயனாளிகளுக்கு ரூ. 5,12,200 மதிப்பில் பல்வேறு உதவித் தொகைகளையும், மாவட்ட சமுகநலத் துறையின் சார்பில் முதலமைச்சர் திருமண நிதியுதவித் திட்டம், மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 50 பெண்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும், 200 கிராம் மதிப்பில் தங்கக் காசுகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்

    நலத் துறை சார்பில் அரசுப் பொதுத் தேர்வுகளில்  மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற 14 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 28,000 மதிப்பில் கல்வி உதவித் தொகைகளும், வருவாய்த் துறை சார்பில் கணினி பயிற்சி பெற்ற 19 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 433 மனுக்கள் பெறப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ((பொது) முஸ்தபாகமால் பாட்சா, தனித்துணை ஆட்சியர் ஜீனத்பானு, மாவட்ட சமுகநல அலுவலர் பூங்குழலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்

    சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வைத்தியநாதன், வேளாண் உதவி இயக்குநர் மல்லிகா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai