சுடச்சுட

    

    அரியலூர் அருகே வயலில் இருந்த மின் மோட்டாரை திருடியவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் அருகேயுள்ள கோபாலன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவர் தனது நிலத்தில் தண்ணீர் பாயச்சுவதற்காக வைத்திருந்த 2 மின் மோட்டார்களை காணவில்லை என்று கயர்லாபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில், கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேல் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப்ட்டிருந்தபோது கொட்டகைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனை (22) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர் முருகேசன் வயலில் மின் மோட்டார்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    போலீஸார் மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்த மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai