Enable Javscript for better performance
விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே உள்ள கீழப்பழூரில் செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் சுரங்க பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

    கீழப்பழூர் சீனிவாச நகரில் தொடங்கிய பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தொடக்கிவைத்தார். பேரணி ஆலை வளாகத்தில் நிறைவடைந்தது.

    இதில் சுரங்கத் தொழிலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு

    பதாகைகள் ஏந்திச் செல்லப்

    பட்டன.

    நிகழ்ச்சியில் அரியலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சி. தொல்காப்பியன், கீழப்பழூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவராஜ், செட்டிநாடு சிமென்ட் ஆலை தலைவர் ம. சுந்தரமூர்த்தி, உதவித் துணைத் தலைவர் (சுரங்கம்) ம. சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் கி. ராமநாதன்,மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai