சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் நடந்து சென்ற இளைஞரை மிரட்டிப் பணம் பறித்தவரை ஜயங்கொண்டம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சக்திவேல் (36).
     இவர் புதன்கிழமை காலை ஜயங்கொண்டம் கடைவீதிக்கு வந்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்றபோது எதிரே வந்த நாகை
     மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் காவல்மேட்டை சேர்ந்த அமோஸ் மகன் ராஜா
     என்கிற சாந்தகிரீன்ரூஸ்வெல்ட் (39) வழிமறித்து மிரட்டி ரூ. 250-ஐ பறித்துச் சென்றாராம்.
     இதுகுறித்து அவர் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ரபீக்ஹுசேன் வழக்கு பதிந்து சாந்தகிரீன்ரூஸ்வெல்டை கைது செய்து விசாரிக்கிறார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai