சுடச்சுட

  

  நடந்து சென்ற தொழிலாளி  இருசக்கர வாகனம் மோதி சாவு

  By  அரியலூர்,  |   Published on : 29th August 2013 10:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் அருகே நடந்து சென்ற தொழிலாளி இரு சக்கர வாகனம் மோதி இறந்தார்.
   அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் காந்திநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (39). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் ஆக. 26-ல் தனது அண்ணன் சுப்பிரமணியுடன் பொய்யாதநல்லூரில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி இறந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த செந்துறையை அடுத்த அசவீரன்குடிக்காட்டைச் சேர்ந்த ராஜ்குமார் (28) பலத்த காயமடைந்தார்.
   இதுகுறித்து செந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர்
   பிரபு வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai