சுடச்சுட

    

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உயிரினங்களுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயன விநாயகர் சிலைகளை அமைக்கக் கூடாது என்றார் ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்லமுத்து.
     அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் விநாயகர் சிலை அமைப்பாளர்களுடன் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் கூறியது:
     விநாயகர் சிலைகள் எளிதில் கரையக்கூடிய கலவையால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ரசாயன சிலைகள், வண்ணப்பூச்சுகளுக்கு அனுமதி கிடையாது. சிலைகள் தாங்கள் முன்பே கொடுத்துள்ள உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது,
     சிலைகளை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அமைக்க வேண்டும். சிலைக்குப் பாதுகாப்பாக போலீஸார் அல்லாமல் அமைப்பின் சார்பில் பாதுகாவலரை நியமிக்க வேண்டும். சிலை ஊர்வலத்தின்போது பிற மதத்தினர் குடியிருப்பு பகுதி, சர்ச், மசூதி அருகில் வெடி வெடிப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது கூடாது. இந்த விதிகளைப் கடைபிடிக்காதோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
     கூட்டத்தில் சிலை அமைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஏ. பழனிவேல், தங்க. குமார், ராம. பாலமுருகன், காவல் உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், குணசேகரன், தனஞ்செயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     காவல் ஆய்வாளர் கோடீஸ்வரன் வரவேற்றார். உதவி ஆய்வாளர் செல்வம் நன்றி கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai