சுடச்சுட

    

    திருமானூர் அருகே புதன்கிழமை 2 லாரிகளுக்கிடையே சிக்கிய கிளீனர் உயிரிழந்தார்.
     அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மகன் பிரவீண்குமார் (21). இவர் கொள்ளிடம் ஆற்றில் மணல் ஏற்றும் லாரியின் கிளீனர்.
     இந்த லாரியின் ஓட்டுநரான ராஜசேகரன் புதன்கிழமை பிற்பகல் லாரியை திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் நிறுத்திவிட்டு லாரியை சுத்தம் செய்யுமாறு பிரவீண்குமாரிடம் கூறிவிட்டுச் சென்றார்.
     பிரவீண்குமாரும் லாரியின் முன்புறத்தில் ஏறி நின்று அதன் கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது லாரி திடீரென முன்புறமாக நகர்ந்து, நின்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் மீது மோதியது. இதில் 2 லாரிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்ட பிரவீண்குமார் அதே இடத்தில் இறந்தார்.
     இதுகுறித்து லாரி ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai