சுடச்சுட

  

  வாகன விதி மீறல்:  அரியலூரில்  327 வழக்குகள் பதிவு

  By  அரியலூர்  |   Published on : 29th August 2013 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையில் போக்குவரத்து விதியை மீறியதாக 327 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
   அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 காவல் நிலையங்கள்,மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், வாகனச் சோதனைச் சாவடிகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 6, அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியதாக 9,அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பாரம் ஏற்றியதாக 13,ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 102, இ சக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்ததாக 35, வாகனப் பதிவு எண் இல்லாமல் ஓட்டியதாக 23 உள்ளிட்ட 327 வழக்குகள் பதியப்பட்டன. இதேபோல் தொடர்ந்து வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும். விதி மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai