சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (65), அதே ஊரைச் சேர்ந்த க. செல்வராசு (55), இவரது மனைவி சாவித்திரி (45) ஆகியோர் ஒரு மொபெட்டில் உடையார்பாளையம் சென்றுவிட்டு திருச்சி - சிதம்பரம் சாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது தத்தனூர் மாந்தோப்பு அருகில் பின்னால் வந்த பால் வேன் மோதி செல்வராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    காயமடைந்த மற்ற இருவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். புகாரின் பேரில் உடையார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai