சுடச்சுட

    

    செந்துறை அருகே பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், செந்துறை காவல் சரகம்,புதுக்குடியைச் சேர்ந்த முருகன் மனைவி தேன்மொழி (40). இவர் தனது மாமியாருடன் புதன்கிழமை இரவு வஞசினபுரத்தில் மொபெட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மருதூரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் காசிநாதன் ஓட்டி வந்த அரசுப் பேருந்து மோதியதில் நிலைதடுமாறி விழுந்த தேன்மொழி பேருந்தின் சக்கரம் ஏறி இறந்தார்.

    இதுகுறித்து தேன்மொழியின் உறவினர் சக்திவேல் (33) அளித்த புகாரின்பேரில் செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு வழக்குப் பதிந்து தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai