Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே  பெண் தற்கொலை - Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி ராணி (55). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இதனால் மனமுடைந்த ராணி செவ்வாய்க்கிழமை காலை விஷ தழையை அரைத்துத் தின்றார். ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.  இரும்புலிகுறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai