Enable Javscript for better performance
விஜயகாந்த் பிறந்த நாள் : மாணவ, மாணவிகளுக்குச் சீருடை- Dinamani

சுடச்சுட

    

    விஜயகாந்த் பிறந்த நாள் : மாணவ, மாணவிகளுக்குச் சீருடை

    By அரியலூர்,  |   Published on : 30th August 2013 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் 5-வது வார்டு பகுதியில் உள்ள ஆர்.சி. நிர்மலாகாந்தி நடுநிலைப் பள்ளியின் 50 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

    தலைமை ஆசிரியை அருள்ஜோசப் மேரி தலைமை வகித்தார். தேமுதிக மாவட்டச் செயலர் இராம. ஜெயவேல் சீருடைகளை வழங்கிப் பேசினார்.  தேமுதிக மாவட்டத் துணைச் செயலர் ஜான்கென்னடி, நகர்மன்ற உறுப்பினர் சிட்டிபாபு, மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் கோபாலகிருஷ்ணன், துணைச் செயலர் சிராஜ், நகர அவைத் தலைவர் புரட்சி சிவா, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஜான்மார்ட்டின், லூயிஸ், ஆசிரியைகள் அன்புக்கரசி, அமலா, ஞானசௌந்தரி, ஜெயராக்கினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai