சுடச்சுட

  

  கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அரியலூரில் வியாழக்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  அரியலூர் மாவட்டம், சாத்தமங்கலத்தில் உள்ள தனியார் ஆலைக்கு உள்பட்ட பகுதிகளில் விதைக்கப்பட்ட கரும்பு பயிர்கள் வறட்சியால் கடுமையான பாதிப்புக்குள்ளானது. இந்த ஆலையை சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் மணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநிலச் செயலர் காமராஜ் பேசும் போது:

  வறட்சியால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு நிவாரணமாக ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும், 3 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்களை கணக்கெடுத்து வறட்சி நிவாரண பட்டியலை வெளியிட வேண்டும்  என்றார்.

  கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்க மாவட்டத் துணைத் தலைவர் பிச்சைபிள்ளை, விவசாய சங்க மாவட்டத் துணைச் செயலர் செல்லத்துரை, கரும்பு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜெயபால், மாநிலக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க துணைத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, நல்லதம்பி, யோகநாதன் உள்ளிட்டோர் பேசினர். பின்னர், அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆட்சியர் அலுவலக மேலாளர் அன்பழகனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai