Enable Javscript for better performance
அரியலூர் அருகேமுன்விரோதத்தால்இளைஞர் மீது தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகேமுன்விரோதத்தால்இளைஞர் மீது தாக்குதல்

    By அரியலூர்  |   Published on : 31st August 2013 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே முன் விரோதத்தால் இளைஞரை தாக்கியதாக 3 பேரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம், காத்தான்குடிக்காட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன்(40) இவர் வி. கைகாட்டியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் காத்தான்குடிக்காட்டைச் சேர்ந்த செந்தில்(25) சிகரெட் கடன் கேட்டுள்ளார் அவர் கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் வியாழக்கிழமை செந்தில் மற்றும் அவரது நண்பர்கள் தினேஸ், செங்கமலம் ஆகிய 3 பேரும் காத்தான்குடிக்காட்டில் உள்ள விஸ்வநாதனின் தம்பி செங்கமலம் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது செங்கமலத்தின் மகன் ஆனந்தனை(17 ) கட்டையால் தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    காயம் அடைந்த ஆனந்தன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேலு வழக்குப் பதிந்து தலைமறைவாக செந்தில் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai