சுடச்சுட

    

    அரியலூர், பெரம்பலூரில்  மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 175 பேர் கைது

    By அரியலூர்  |   Published on : 31st August 2013 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடையணிந்து அரியலூர், பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 175 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    கோரிக்கைகள்: சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்பப் பாதுகாப்புடன் கூடிய சட்ட ரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும், தகுதி வாய்ந்த சமையல் உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வு

    வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த

    மறியல் போராட்டம் நடைபெற்றது. 

    அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலாளர் சி. இரட்சண்யமேரி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் டி. முருகேசன், வி. தமிழரசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டச் செயலாளர் த. தமிழரசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் மாநிலச் செயலாளர் கே. சத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ். தண்டாயுதபாணி உள்ளிட்டோர் பேசினர்.

    பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மறியல் செய்ய முயன்ற 55 பெண்கள், 33 ஆண்கள் என 88 பேரை அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் தொல்காப்பியன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

    பெரம்பலூர்:  இதே போல பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு, மாவட்ட துணைத்தலைவர் ஆர்.தமிழ்மணி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆ. பெரியசாமி, மாவட்டத் தலைவர் டி.செல்லப்பிள்ளை, செயலர் டி.எஸ். பெரியசாமி மற்றும் 66 பெண் ஊழியர்கள் உள்பட 87 பேரை, பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் சர்புதீன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai