சுடச்சுட

    

    தா. பழூரில் கார் ஓட்டுநரை தாக்கியதாக 2 பேர் கைது

    By அரியலூர்  |   Published on : 31st August 2013 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : தா. பழூரில் கார் ஓட்டுநரை தாக்கியதாக 2 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(38) கார் ஓட்டுநர். அதே ஊரைச் சேர்ந்தவர் கண்ணாயிரம்(22). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது. இந்நிலையில் தா. பழூர் அருகே நேரிட்ட சாலை விபத்தில் ரமேஷ் இறந்து விட்டதாக காரைக்குறிச்சி கிராமத்தில் கண்ணாயிரம் வதந்தியை பரப்பினாராம்.

    இதைத் தட்டிக் கேட்ட ரமேஷையும், அவரது நண்பர் ராயப்பனையும், கண்ணாயிரமும், அவரது நண்பர் அப்பு (எ) மணிகண்டனும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராயப்பன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து ரமேஷ் தா. பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் குலசேகரன் வழக்குப் பதிந்து கண்ணாயிரம், மணிகண்டனை கைது செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai