சுடச்சுட

    

    பெண்ணாடம்-அரியலூர் இடையே போக்குவரத்தை முறைப்படுத்தக் கோரிக்கை

    By அரியலூர்,  |   Published on : 31st August 2013 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண்ணாடம் - அரியலூர் இடையே இயக்கப்படும் பேருந்துகளின் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் சோழன்குடிக்காடு எஸ்.எஸ். கணேசன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: ஆர்.எஸ். மாத்தூரிலிருந்து காலை 9 மணியிலிருந்து 9.05 மணிக்குள் நகரப் பேருந்து தடம் எண் 13 பெண்ணாடத்திலிருந்து கோட்டைக்காடு, மாத்தூர் வழியாக அரியலூருக்கு செல்லும் பேருந்தும், பெண்ணாடத்திலிருந்து ஈச்சங்காடு சிமென்ட் ஆலை , ஆர்.எஸ். மாத்தூர், செந்துறை ஜயங்கொண்டத்திற்கும் பேருந்துகள் செல்கின்றன. மேற்கண்ட 3 பேருந்துகளும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.  பின்னர் ஆர்.எஸ். மாத்தூர் மற்றும் பெண்ணாடத்திலிருந்தும் அரியலூருக்கு  பிற்பகல் 3 மணிக்குத்தான் பேருந்து இயக்கப்படுகிறது. இடையில் 6 மணி நேரத்துக்கு செந்துறை - அரியலூர் இடையே பேருந்து வசதியே இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்தப் பேருந்துகளை 30 நிமிட இடைவெளியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ஜயங்கொண்டம் - செந்துறை பேருந்து தடம் எண் 2 பேருந்தை காலை 6.30 மணிக்கும், இரவு 9.30 மணிக்கும் ரயில் பயணிகளுக்காக செந்துறை ரயில் நிலையம் வரை இயங்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த  மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai