சுடச்சுட

    

    மனுநீதி நாள் முகாமில் ரூ. 4.50 லட்சம்நலத்திட்ட உதவிகள்

    By அரியலூர்  |   Published on : 31st August 2013 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாமில் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் சிறப்பு மனுநீதி திட்ட நிறைவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி தலைமை வகித்து 92 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:  அரசு வழங்கி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பற்றி தெரிவிக்கவே இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் இது போன்ற முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இம்முகாமில் மிகவும் குறைவான மனுக்களே வந்துள்ளன, அதிகாரிகள் மக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு செல்வதில் பாலமாக செயல்பட வேண்டும் என்றார். செந்துறை வட்டாட்சியர் ராமசந்தர் வரவேற்றார். உடையார்பாளையம் கோட்டாட்சியர்(பொறுப்பு) கணேசன் முன்னிலை வகித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai