சுடச்சுட

  

  ஜயங்கொண்டத்தில் வட்டாட்சியரை மிரட்டிய ராணுவ வீரரை ஜயங்கொண்டம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள வென்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த தம்புசாமி மகன் மதியழகன்(31). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற இவர் வட்டாட்சியர் ரவியிடம் எனக்கு குடும்ப அட்டை எப்போது வரும் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  மேலும் வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் திட்டி மிரட்டியுள்ளார்.

  இது குறித்து வட்டாட்சியர் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிந்து மதியழகனை கைது செய்து ஜயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai