சுடச்சுட

    

    வழக்குரைஞரிடம்தகராறு செய்ததாக தம்பதி மீது வழக்கு

    By அரியலூர்  |   Published on : 31st August 2013 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : அரியலூர் அருகே வழக்குரைஞரிடம் தகராறு செய்ததாக தம்பதி மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    அரியலூர் அருகே உள்ள காத்தானகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (35) வழக்குரைஞர். இவர் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்காக ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.

    இந்நிலையில், ராமசாமியின் உறவினர் விஸ்வநாதன் (35) அவரது மனைவி ஜெயந்தி (30) இருவரும் வழக்குரைஞரிடம் சென்று ராமசாமிக்காக வாதாடக் கூடாது என்று கூறி தகராறு செய்தனராம். இதுகுறித்து செந்தில் கயர்லாபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் ராஜசேகர் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள விஸ்வநாதன், ஜெயந்தி தம்பதியைத் தேடி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai