சுடச்சுட

    

    அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
     கூட்டத்திற்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார், பொதுமக்களிடமிருந்து 301 மனுக்கள் பெற்று, அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
     மேலும், சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த 30 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை ஆணை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஜயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாற்றுத் திறனாளிகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தேசிய சிறுசேமிப்பு வைப்புப் பத்திரம், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ. 3,500 மதிப்பில் இலவச சலவைப் பெட்டிகள், வருவாய்த் துறை சார்பில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கிராம உதவியாளருக்கான பணி நியமன ஆணை, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலருக்கு தமிழக அரசு மூலம் வழங்கிய வாகனத்திற்குரிய சாவி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 10 தலைமை அலுவலர்களுக்கு அடையாள அட்டைகள் ஆகியவற்றை வழங்கினார்.
     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஜீனத்பானு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செல்லதுரை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், வட்டாட்சியர் பாலாஜி, அரியலூர் சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai