சுடச்சுட

  

  உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

  By  ஜயங்கொண்டம்  |   Published on : 01st January 2013 10:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை ஜயங்கொண்டம் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
   ஜயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தபுரம் நடுப்பட்டிப் பிரிவுச் சாலையில் ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் கோடீஸ்வரன், உதவிக் காவல் ஆய்வாளர்கள் ரபீக்ஹுசேன், தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் திங்கள்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
   அப்போது அவ்வழியே தோளில் நாட்டு துப்பாக்கியுடன் மொபெட்டில் வந்த இலையூர் மேலவெளியைச் சேர்ந்த ராஜதுரையை மறித்து சோதனை செய்தனர்.
   அப்போது, அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் இல்லாதது தெரியவந்தது.
   மேலும் அவரது மொபெட்டிற்கும் உரிய ஆவணங்கள் இல்லாததால் மொபெட்டையும், நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்து ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.
   வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமுருகன், ஜன. 11 வரை ராஜதுரையை காவலில் வைத்த உத்தரவிட்டார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai