Enable Javscript for better performance
திருவள்ளுவர் இயக்கங்களின் மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் தமிழ்நாடு திருவள்ளுவர் இயக்கங்களின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பு மாநாடு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
     ஜயங்கொண்டம் திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் சி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
     தத்தனூர் மீனாட்சிராமசாமி கல்வி நிறுவனங்களின தாளாளர் எம்.ஆர். ரகுநாதன், மதுராந்தகம் திருக்குறள் பீடம் குருபழனி அடிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     திருப்பூர் அனிதா கிருஷ்ணமூர்த்தி தொடக்கி வைத்தார். கேரள திருவள்ளுவர் ஞானமடம் சிவானந்தர் தலைமையில் திருவள்ளுவருக்கு மலர் வழிபாடு நடைபெற்றது.
     மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை சடையர்கோவில் நாராயணசாமி குழுவினரின் கோலாட்டத்துடன் திருவள்ளுவர் வெண்கலச் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஜயங்கொண்டம் காந்தி பூங்கா முன் ஊர்வலம் தொடங்கி நான்கு சாலை, கடைவீதி, அண்ணாசிலை வழியாக சென்று மாநாடு நடக்கும் இடத்தில் முடிந்தது.
     மேலும் கலந்தாய்வுக் கருத்தரங்கம், திருக்குறள் பட்டிமன்றம் நடைபெற்றது.
     மாநாட்டில் திருக்குறளுக்கு தனி வாரியம் அமைத்து வள்ளுவர் கோட்டத்தை தலைமையிடமாக அறிவிக்க வேண்டும், திருக்குறளுக்கென பல்கலைக்கழகம் அமைத்து, திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     இதில் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த திருச்சி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திருவள்ளுவர் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai