சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் செங்குந்தர் கல்வி மற்றும் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில் மருத்துவம், பொறியியல் மற்றும் பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 2.40 லட்சத்தில் அண்மையில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
   அறக்கட்டளை சார்பில் விருது பெற்றோருக்குப் பாராட்டு விழா, கல்வி உதவித்தொகை வழங்க நன்கொடை வழங்கியோருக்குப் பாராட்டு விழா, வள்ளல்கள் படத்திறப்பு, மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு, கல்வி உதவித்தொகை வழஙகும் விழா நடைபெற்றது.
   அறக்கட்டளைத் தலைவர் ஏ.வி. ரத்தினம் தலைமை வகித்தார். எம்.ஆர் கல்லூரி இயக்குநர் வி.சி. பழனி முன்னிலை வகித்தார்.
   விழாவில் பங்கேற்ற தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் பெண்ணாடம் ஆ. ராஜவேலு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார்.
   மருத்துவர் ஜெயராமன், வழக்குரைஞர் பி.வி. ராமலிங்கம், எம்.ஆர்.பி. காளிமுத்து, செங்குந்தர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் த. சண்முகசுந்தரம், அரியலூர் மாவட்ட செங்குந்தர் சங்கச் செயலர் பழ. புனிதம் ஆகியோர் வாழ்த்தினர்.
   த. திருஞானம், சி.எம்.கே. சாமிநாதன், த. கந்தசாமி, வி. பாண்டியன், எஸ். சுந்தரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
   கல்வி அறக்கட்டளைச் செயலர் டி.இ. ஆறுமுகம் வரவேற்றார். துணைச் செயலர் சோ. கனேசன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai