சுடச்சுட

  

  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

  By  அரியலூர்  |   Published on : 01st January 2013 10:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி ஆணை பெற்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட தேர்வு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   அரியலூர் மாவட்டத்தில் விலங்கியல் 5, வேதியியல் 3, ஆங்கிலம் மற்றும் கணிதம் தலா 2, இயற்பியல், வரலாறு, வணிகவியல் பாடங்களில் தலா 1 என அரியலூர் மாவட்டத்திற்குள் 15 பணியிடங்களுக்கு திங்கள்கிழமை காலை நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
   தொடர்ந்து மாலையில் நடைபெற்ற வெளி மாவட்டங்களுக்கான கலந்தாய்வில் தமிழ் 15, கணிதம், விலங்கியல், உடற்கல்வி இயக்குநர், பொருளாதாரம், புவியியல் பாடங்களில் தலா 1 என மொத்தம் 20 இடங்கள் நிரப்பப்பட்டன.
   இந்தக் கலந்தாய்வில் மாவட்டத்திற்குள் 15 இடங்களும், வெளி மாவட்டங்களில் 20 பணியிடமும் நிரப்பப்பட்டு, பணியிடங்களை தேர்வு செய்தவர்களுக்கான ஆணையை முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai