சுடச்சுட

  

  நெசவுத் தொழிலாளி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

  By  ஜயங்கொண்டம்  |   Published on : 04th January 2013 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையத்தில் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் பூட்டிய வீட்டிலிருந்து 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
   உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார் (42), இவரது மனைவி ஜெயந்தி (37). இருவரும் நெசவுத் தொழிலாளர்கள். வியாழக்கிழமை காலை இருவரும் வீட்டை பூட்டி சாவியை கதவு நிலையில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர்.
   பகல் 12 மணியளவில் பள்ளிக்குச் சென்றிருந்த அவர்களது மகன் பிரசாந்த் (16) வீட்டிற்கு வந்த போது, வீட்டின் உள்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததாம். இதனால், வேலைக்கு சென்றிருந்த தனது தந்தையிடம் சென்று இது குறித்து பிரசாந்த் தெரிவித்தான்.
   இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பின்புறக் கதவு திறந்திருந்தது.
   உள்ளே சென்று பார்த்த போது, பீரோ இருந்த அறை கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
   இதுகுறித்த புகாரின் பேரில், உடையார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் அழகிரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai