Enable Javscript for better performance
பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

    By  ஜயங்கொண்டம்  |   Published on : 04th January 2013 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் வாரியங்காவலில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
     இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், உடையார்பாளையம் கல்வி மாவட்ட அனைத்து பள்ளி தேசிய பசுமைப் படை மாணவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
     பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் முடியரசி மாரிமுத்து பேரணியைத் தொடக்கி வைத்தார். பெற்றோர்- ஆசிரியர் கழக துணைத் தலைவர் செல்வராஜ், மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     பேரணியில், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகிதபை அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்துவோம் என்றும், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் விளையும் கேடுகளை விளக்கியும் மாணவ, மாணவிகள் முழக்கமிட்டுச் சென்றனர். பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
     தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், அதற்கான மாற்று கண்டறிதல் என்ற தலைப்பில் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
     இதில் 85 பள்ளிகளைச் சேர்ந்த 160 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai